ஓம் ரவிசுதாய வித்மஹே மந்தக்ரஹாய தீமஹி தந்நோ சனி ப்ரஜோதயாத்; ஓம் காகத்வஜாய வித்மஹே கஹட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனி ப்ரஜோதயாத்; ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரஜோதயாத்; ஓம் சனீஸ்வராய வித்மஹே சாய புத்ராய தீமஹி தந்நோ சனி ப்ரஜோதயாத்; நீலாஞ்சனம் சமாபாஷம் ரவிபுத்ரம் எமாக்ரஜம் சாய மார்தாண்ட சம்பூதம் தம்நமாமி சனிஷ் ச்சரம்

6ARIVUGAL ALLA 8 ARIVUGAL (Sens is not 6 its 8)

6 அறிவுகள் அல்ல 8 அறிவுகள்

   இந்தியத்திருநாட்டில் பிறந்த ஆதி மனிதனுக்கு உணவுக்காக சிந்திக்கின்ற வேலையை இயற்கை வைக்கவில்லை. அதனால் தனக்குவரும்  கரணம் தெரியாத துன்பங்களுக்குக் கரணம் தேடி, தன் சுகத்தைத் தானே வளர்த்துக் கொள்வதற்காகப் பகுத்தறிவு என்கின்ற பேராயுதத்தை இயற்கை மனிதனுக்கு வழங்கியுள்ளது. அதனால் தனக்கு வரும் துன்பங்களுக்குக் கரணம் தேடும் கட்டாயத்தை மனிதனுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.


    அதன் காரணமாகத், துன்ப உணர்வுக்கான காரணங்களை அறிய முற்பட்ட அன்றைய சிந்தனையாளர்கள், இயற்கையின் அற்புதங்களைக் கொண்டு வியந்தார்கள். அதனைத்தொடர்ந்து இயற்கையின் செயல்பாடுகளை ஆய்ந்த போது, உலகிலுள்ள அனைத்தும் பஞ்ச பூதங்களலானது என்றும். மனிதனும் பஞ்சபூத சக்திகளால் ஆனவனே என்பதையும் உணர்ந்தனர். மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி போன்ற புலன்கள் வழியாக ஏற்படும் உணர்வுகளே தன்னை இயக்குவதை உணர்ந்து அந்த ஐந்து உணர்வுகளையும் ஐந்து அறிவாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளனர்.


  எல்லா உயிரினங்களையும் அந்த ஐந்து உணர்வுகளே இயக்கி வருவதையும் உணர்ந்து, அந்த உணர்வுகளின் அடிப்படையிலேயே உ உயரினங்களை வகைப்படுத்தியுள்ளனர்.


    அதே சமயம் ஐந்து புலன்களால் உருவாகும் உணர்வுகள் விலங்குகளோடு முடிவதையும், புலன்களையும் தாண்டி மனிதனுக்குக் காணும் கட்சி களிலிருந்து உணர்வுகளால் உணரக்கூடிய ஒரு உணர்வு, வளரும் தன்மையோடு இருப்பதையும், அந்த உணர்வு காணும் கட்சிகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்து தன் சுகத்தைத்தானே வளர்த்துக் கொள்ளும் தன்மைகொண்டுள்ளதைக் கண்டு அந்த அறிவுக்கே பகுத்தறிவு என்று பெயரிட்  டுள்ளனர்.


   அதனைத் தொடர்ந்து எந்தெந்த உயிரினத்திடம் என்னென்ன உணர்வுகள் உள்ளதென்று ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தியுள்ளனர்.



தொடு உணர்வு
சுவை உணர்வு
பார்வை உணர்வு
நுகர்தல் உணர்வு
கேட்டால் உணர்வு
பகுத்தறிவு



     எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் யாரால் இப்படி அறிவுகள் வகைப் படுத்தப்பட்டது. என்கிற குறிப்புக்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் வளரும் பகுத்தறிவினால் வளர்ந்த மனிதகுலத்தின் இன்றைய அறிவியல் வளர்ச்சி இன்று, மனித குலத்திடம் இன்னும் இரண்டு அறிவுகள் உள்ளதாக நமக்கு உணர்த்தியுள்ளது.


   அதாவது உயிரனங்கள் 6 வகையே. ஆனாலும் அவைகளிடமுள்ள அறிவுகள் 6 அல்ல 8 என்று இன்று நம்மை உணரச்செய்துள்ளது. அவைகள் பின்வருமாறு.

பற்று உணர்வு
தொடு உணர்வு
சுவை உணர்வு
பார்வை உணர்வு
நுகர்தல் உணர்வு
கேட்டால் உணர்வு
பகுத்தறிவு
ஞானம்
  அறிவை வகைப்படுத்திய காலத்து அறிவியல் ஆய்வாளர்கள், ஒரு உணர்வுக்கு ஒரு அறிவு என்று அடிப்படையிலேயே உயிரினங்களை அவைகளிடமுள்ள அறிவு நிலைகளை ஆய்ந்து வகைப்படுத்தியுள்ளார்கள்.
   
    அதன்படி உலகில் தோன்றிய முதல் உயிரினம் தாவரம் என்பதால் அதற்கு ஓர் அறிவென்று வகைப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. நாமும் இன்றுவரை நம் முன்னோர்களின் சிந்தனைகளைத் தாண்டி நம்மால் சிந்திக்க முடியாது என்று தாழ்வு மனப்பான்மையில், சிந்திப்பதையே தவிர்த்து வாழ்ந்து வருகிறோம்.


     ஆனால் நம்மால் வளர்க்கப்பட்ட அறிவியல் தற்போது தாவரங்களுக்கு இரண்டறிவு என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களை உணர்த்தி நம்மை ஏற்க வைத்துள்ளது.





1. ஒரு உயிரினம் இரண்டு உயிர் அணுக்களின் கலவையில்தான் உருவாக முடியும் என்பதுதான் இயற்கையின் நியதி.அதன்படி இரண்டு உயிரணுக் களிலிருந்து உருவாகின்ற தாவரங்களுக்கு ஓர் அறிவுதான் எனபது அறிவியல் விதிப்படி ஏற்க கூடியதாக இல்லை.


2. இப்பூமியில் தோன்றிய முதல் உயிரினம் தாவரம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே சமயம், முதல் உயிரினம் தாவரம் என்பதால் அதற்கு ஓர் அறிவுதான் என்ற நோக்கில் அறிவை வகைப்படுத்தப்பட்டிருந்தால் அது இன்று ஏற்கக்கூடியதாக இல்லை.


3. பூமியில் நடப்படும் விதையிலிருந்து முதலில் முளைத்து வெளியே வருவது வேர்பகுதியே. முதலில் வெளியே வருகின்ற வேர், இப்பூமியில் சிலகாலம் தன கடமையை ஆற்றவும், தனக்கு வேண்டிய உணவைப் பெறுவதற்காகவும் நீராலும் காற்றாலும்தான் அழிந்துவிடாமலிருப் பதற்காகவும் வேர், பூமியை இறுகப் பற்றி நிற்கிறது. வேரின் இந்தப் பற்றுதல் உணர்வுதான் தாவரத்தின் முதல் உணர்வு என்பதை யாராவது மறுக்க இயலுமா? அதனால் தற்போது பற்றுதல்தான் தாரத்தின் முதல் உணர்வு என்று நம்மை ஏற்க வைத்துள்ளது.


4. அடுத்துத் தாவரத்தின் இலைப்பகுதி, பூமியைவிட்டு வெளியே வந்த பிறகுதான் தோடு உணர்வைப் பெறுகிறது. அதனால் தொடு உணர்வு இனி 2-வது அறிவுதான் என்பதும், தாவரத்திற்கு 2 அறிவு என்பதும் தற்போது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.


5. பற்றுதல்தான் நமக்கு வரும் அத்தனைத் துன்பங்களுக்கும் காரணம் என்றே நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் மனிதனிடமுள்ள ஒவ்வொரு அறிவும், ஒவ்வொரு உயிரினத்திடமிருந்துதான் நமக்கு வந்ததாகவே இதுவரைத் தோன்றி மறைந்த அத்தனை சிந்தனையாளர்களும் கூறியுள்ளனர். ஆனால், துன்பத்திற்கு அடிப்படையானப் பற்றுதல் உணர்வு, எந்த உயிரினத்திடமிருந்து நமக்கு வந்ததென்று இதுவரை யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் இன்றோ அந்தப் பற்றுதல் உணர்வு, தாவரத் திடமிருந்தே வந்துள்ளது நமக்கு தெரிகிறது. அதனால் தாவரத்திற்கு இரண்டறிவு என்றுதானே கூறவேண்டும்?


  இதை ஆன்மீக சிந்தனையாளர்களின் வழியிலும் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.


  உருவில் இல்லா பிரபஞ்ச ஆற்றல், எதோ ஒரு காரணத்துக்காக தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்த எண்ணியபோது அதற்கு ஒரு உருவம் தேவைப்பட்டது. அதற்காக அப்பேராற்றலே ஒரு உருவத்தைப் படைத்து, அது சுயமாக இயங்க அதற்கு ஒரு ஆற்றல் வேண்டும் என்பதற்காக, உருவில் இல்ல பிரபஞ்சப் பேராற்றலே பின்னமாகி அந்த உருவத்திற்குள் ஊடுருவி அதை இயக்குகிறது.


    இப்போது சற்று சிந்தித்துப் பாருங்கள், பற்று உருவத்தினுடையதா? அல்லது அந்தப் பேராற்றலினுடையதா? பற்று பேராற்றலினுடையதுதான் என்றால், அந்தப் பற்றை எப்படி நம்மால் விட முடியும்?


 பற்று இயற்கையினுடையதாக உள்ளதால்தான் உயிர் உடலை விட்டுப் பிரிகின்றபோது அந்த உடல் படுகின்ற துன்பம் உருவத்திற்கும் அருவத் திற்க்கும் உள்ள பற்றைக் காட்டுவதாக உள்ளது. 


      மேலும் அறிவை வகைப்படுத்தும்போது அறிவு, பகுத்தறிவு, ஞானம் என்று மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். நம்மவர்கள் ஒரு பெயரை வைக்கிறார்கள் என்றால் காரணத்தோடுதான் வைப்பார்கள் என்பது நாம் அனைவருமே அறிந்ததே. அதனால் அறிவு, பகுத்தறிவு, ஞானம் எப்படிப் பெயரிட்டார்கள் என்று சிந்தித்தபோது, கீழ்க்கண்ட விளக்கங்கள் எனக்குக் கிடைத்தது.


   இனி அறிவின் தன்மைகளைப் பார்போம்.


   அறிவு


   (இது 5 வகை உயிரினங்களில் உள்ள, 6 வகை அறிவுகள். இது தாவரங்கள் முதல் மனிதன் வரையிலான அனைத்து உயிரினங்களிடமும் உள்ள உணர்வுகள்).


1. ஒரு உயிரினம் எதுவரை சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும் என்று இறைவனால் / இயற்கையால் தீர்மானிக்கப்பட்டு உடல் செல்களில் பதிவு செய்யப்பட்டது.
2. இயல்பாக இயங்குவது.
3. வளரும் (சிந்திக்கும்) தன்மை இல்லாதது.
4. தேவையின்போது மட்டுமே செயல்படக்கூடியது.


பகுத்தறிவு
 
    இது ஒரே வகை


 இதுநாள்வரைப் பகுத்தறிவு ஆறாவது அறிவாகவே கருதப்பட்டு வந்தது. தாவரத்திற்கு இரண்டு அறிவு என்று தற்போது உணரப்பட்டுள்ளதால் பகுத்தறிவு இனி ஏழாவது அறிவாகிறது.


   பகுத்தறிவு, பார்வையில் அறுபத்தி ஐந்து சதமும், செவி வழியாக இருபது சத்தமும், நக்கு, மூக்கு, தோல் முதலான புலன்கள் வழியாக தலா ஐந்து, ஐந்து சதமும் வளர்வதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


1.காணும் காட்சிகளுக்கு மனம் தரும் முக்கியத்துவத்துக்கு ஏற்ப அக்காட்சி நம் செல்களில் பதிவாகின்றது. இப்படி பதிவாகின்ற காரணத்தால் அறிவு, வளரும் தன்மை கொண்டப் பகுத்தறிவாக மலர்கிறது.


2. ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட உருவாக்க முடியாத நமக்குப் பொருட்களின் வேறுபாட்டை உணர்த்தி, அவைகளைத் தனக்குத் தேவையானபடி உருமாற்றி, உடல் சுகத்தை வளர்க்க துண்டுவது.


3. பகுத்தறிவு பார்வையில் படாத எதையும் நமக்கு உணர்த்துவதில்லை. அதனால் நிகழ்கால சிந்தனைகளை மட்டுமே தரக்கூடியது இது.


4. உருமாற்றம் ஆற்றல் உள்ளதால் தன்னை ஒரு உற்பத்தியாளனாகத் தற்பெருமை கொள்ளசெய்வது.


5. இது பொருளறிவை மட்டுமே நமக்கு உணர்த்துவது. பொருளைப் பெரிதாக எண்ணத் துண்டுவது.


ஞானம்


  (இது பொருள், ஞானம், அருள் ஞானம் என்று இரண்டு வகையாக செயல்படுகிறது.


    ஜடாமுடி தரித்து, நம்மால் செய்ய முடியாததையும், இல்லாத ஒரு பொருளைத் தன்னுடையத் தவ ஆற்றலால் வரவலைப்பவர்களே ஞானிகள் என்பது பலகாலமாக நம்மிடையே நிலவிவரும் ஒரு பொதுக்கருத்து.


    இயற்கைக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்பதெல்லாம் கிடையாது. நாம் அனைவருமே பஞ்சபோத சக்திகளால் ஆனவர்களே. அதேபோல் ஞானம் என்ற உணர்வும் நம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் சராசரி மனிதர்களான நாம் அதைப் பயன்படுத்துவதில்லை. அதனால் சராசரி மனிதர்களிடம் ஞானம் இல்லை என்று கருத முடியாது.


   ஞானம் என்ற உணர்வு நம்மை எதையெல்லாம் உணர வைக்கிறது என்று இனி பார்ப்போம்.


1. பொருட்களுக்குள் ஊடுருவி அதன் தன்மையை அறியச் செய்கிறது. (விஞ்ஞானிகள்)

2. உருவில் இல்லாமலே உருவில் உள்ள பொருட்களை இயக்கும் ஆற்றலை உணரச் செய்வது (ஞானிகள்)


3. மனித முயற்சியில் வளர்க்கப்படுவது.


4. மனிதன் தேடலைப் பூர்த்தி செய்யக்கூடியது.


5. இயற்கையின் இயல்பான செயல்கள் அனைத்தும் அறிவியல் தான் என்பதை நமக்கு உணர்த்துவது.


6. உயிரினங்கள் அனைத்தும் தன்னைவிட உயர்ந்த அறிவுள்ள உயிரினங்களுக்காகவே வாழப் பிறந்தவைகள் என்பதை நமக்கு உணர்த்துவது.


7. உலகில் மனிதனைவிட உயர்ந்த அறிவுள்ள உயிரினம் அவரவர் குழந்தைகளே என்பதை உணர்த்துவது.


8. இதுவரை இயல்பாகப் பிறப்பதாக நாம் நினைத்த நம் குழந்தைகளைத் தேவையின் அடிப்படையில் திட்டமிட்டுப் பெறுவதற்கான சிந்தனைகளை அழிப்பது.


9. நாம் காணும் காட்சி, நம் செல்களில் உணர்வலைகளின் மூலமாக எப்படிப் பதிவாகிப் பகுத்தறிவாகிறது என்பதை உணரச் செய்கிறது.


10௦. மற்ற உயிரினங்களின் குணங்கள் உலகம் முழுக்க ஒரே தன்மையில் உள்ளபோது, மனிதனின் குணங்கள் மட்டும் உடன் பிறந்தவர்களோடு கூட ஒத்துப் போகததற்கான காரணங்களை நமக்கு உணர்த்துவது.


11. பிறவிக் குணத்தையே மாற்றவல்லது.
12. வான சாஸ்திரத்தை கண்டறியச் செய்தது.
13. பெண்களை உடலால் பலவீனர்களாக இயற்கை படைத்ததன் நோக்கத்தை  நாம் உணர்ந்திருந்தாலும், அவர்களை நாம் மதிக்க மறந்ததற்கான காரணத்தை நமக்கு உணர்த்துவது.


  இப்படி, ஞானம் என்ற உணர்வு இன்னும் பல இயக்க ஆற்றலை நமக்கு உணர்த்துகிறது.


  ஞானம் என்ற உணர்வைக் கொண்டுதான், அறிவு, பகுத்தறிவு, ஞானம் என்ற உணர்வுகளின் வலிமையை நம்மால் அறியமுடிகிறது.


   இப்போது சற்று சிந்தித்துப் பாருங்கள், பகுத்தறிவும், ஞானமும் நம்மிடம் இருந்தாலும், அதன் வலிமையை நாம் உணராததால், அறிவு நிலையிலேயே இன்னமும் செயல்படுகிறோம் என்பது தெரிகிறது. அறிவு நிலையிலேயே நாம் செயல்படுவதால்தான் தவறுகள் தொடர்கதையாகவே உள்ளது.


    இப்படித் தவறு செய்கின்ற மனிதனைப் பார்த்து உனக்கு அறிவு இருக்கா என்று கேட்கிறோம். இதிலிருந்து இன்னும் நாம் அறிவு, பகுத்தறிவு, ஞானம் என்பதற்கு சரியான பொருள் தெரியாமலே வாழ்கிறோம் என்பதையே காட்டுகிறது.


   இனியாவது, தவறு செய்கின்ற மனிதனைப் பார்த்துப் பகுத்தறிவுள்ள நீ, அறிவுள்ள விலங்குகள்போல் செயல்படலாமா? என்று கேளுங்கள். அப்போது பகுத்தறிவின் தன்மையை உணர்ந்து மனிதன் மனிதனாக வாழத் துவங்குவான். அதுமுதல் மனிதனிடம் தவறுகள் தானாகக் குறையத் துவங்கும்.


   இப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த ஞான உணர்வை, அறிவின் வகையில் சேர்க்காமல் போனதற்கு, பகுத்தறிவைப் போற்றி வளர்த்தவர்கள்தான் அறிவை வகைப்படுத்தியிருக்க வேண்டும். இன்றைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இன்று ஞான உணர்வின் வலிமையை உணர்ந்துள்ளதால் அந்த ஒப்பற்ற உணர்வையும் அறிவின் வகையில் சேர்த்துவிட்டதால், இனிவரும் காலங்களில் மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படும்.


    இப்போது சொல்லுங்கள் ஞானம் என்ற உணர்வு எட்டாவது அறிவுதானே? இந்த எட்டாவது அறிவான ஞான அறிவு வளர வளரத்தான் நம்மிடம் அமைதித் தன்மை வளரும்.




வணக்கம் வாழ்க வளமுடன்
ஜீவஸ்ரீ
நிறுவனர் : அமைதி ஆராய்ச்சி மையம்
ஜீவா பிராசஸ்
ஏரிதெரு, ஓசூர் - 635 109.
செல் : 9150171316
 
Top